சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் சடலம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றான்.
மாலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய், ஊர் முழுவதும் தேடி பார்த்தார். அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்தக்கரை படிந்த ஹரிசங்கரின் உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட பொலிஸ் கூடுதல் சூப்பிரண்ட் தலைமையில் ஏராளமான பொலிஸார் காடுகள் அடர்ந்த மலைப்பகுதியில் சிறுவனின் பிரேதத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பல மீட்டர் இடைவெளியில் அவனது தலை, கை, கால் போன்றவை துண்டு துண்டாக கிடந்தன.
அவற்றை சேகரித்த பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஹரிசங்கரின் துண்டிக்கப்பட்ட உடலின் பாகங்கள் கிடைத்த அதே இடத்தில் 2 ஆடுகள் பலியிடப்பட்டு கிடந்ததாகவும், பக்கத்தில் யாகம் வளர்த்து பூஜை செய்யப்பட்டதற்கான அடையாளம் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் சிகப்பு நிற வளையல்களும் சிதறி கிடந்ததால் ஹரிசங்கரை யாரோ ஒரு மந்திரவாதி கடத்தி சென்று காளி தேவிக்கு நரபலி கொடுத்து விட்டதாக உள்ளூர் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த மாதிரியான மூட நம்பிக்கைக்குதான் கோவிலை உடைக்கிறார்கள் ,,சாமி பெயரை சொல்லி நரப்பலி கொடுக்கிறார்கள் ,இது சரியா / முட்டாள் பக்தர்கள் இருக்கும் வரையிலும் இது சாமிகளுக்கு கொண்ட்டாட்டம் . கோ…… உடையுங்கள், அது தமிழ் நாடாக இருந்தாலும் சரி மலேசியாவாக இருந்தாலும் சரி….. அதற்க்கு பதிலாக பகுத்தறிவை வளருங்கள் .
வாருங்கள் கோ…. உடைப்போம் .
மக்களுக்கு பகுத்தறிவை கொடுப்போம்