இந்தியாவை சற்று திரும்பி பார்க்கலாமே!

jp_0012014ம் ஆண்டை இன்முகத்தோடு அடியெடுத்து வைக்கும் இந்திய மக்களுக்கு எங்களது புத்தாண்டு வாழ்த்துகள்.

புதிய ஆண்டை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், தான் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்பது அவனது வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடும் விடயமாகும்.

அந்த வகையில் புத்தாண்டை வரவேற்க தயாராக உள்ள நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய நாட்டில் நடந்த நிகழ்வுகளை சற்று நினைவுகூறலாம்.

உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த டெல்லி பலாத்கார சம்பவம்

டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட காமக்கொடூரர்களால் பலாத்கார கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவின் அஸ்தி ஜனவரி 1ம் திகதி கங்கைக்கு சென்றடைந்தது.

மேலும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லி மாணவி நிர்பயாவுக்கு வீரப்பெண்மணி விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், மாணவியின் மரணம் குறித்து 1000 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நாடு முழுவதும் பற்றி எரிந்த வழக்கில் செப்டம்பர் 13ம் திகதி குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

மறைந்த டெல்லி மாணவி நிர்பயாவுக்கு வீரப் பெண்மணி விருது

டெல்லி மாணவி பலாத்காரம்: குற்றவாளிகள் 4 பேருக்கும் மரணதண்டனை

மறைந்த டெல்லி மாணவியின் அஸ்தி கங்கையில் கரைப்பு

பிரமிக்க வைத்த அம்மா உணவுதிட்டம்

ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் ஒன்பது மாநகராட்சிகளில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் என குறைந்த விலைகளை கொண்ட ஆயிரம் சிற்றுண்டி உணவகங்கள் யூன் 2ம் திகதி திறக்கப்பட்டது.

மாநகராட்சிகள் மட்டுமல்லாது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘அம்மா’ உணவகம் நவம்பர் 21ம் திகதி திறக்கப்பட்டது.

‘நோய்ப் பிணியுடன் பசிப் பிணியையும்’முதல்–அமைச்சர் ஜெயலலிதா போக்கி உள்ளதாக நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மனதார பாராட்டினர்.

இனி 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார், தயிர் சாதம்: தமிழகத்தில் புதிய திட்டம்

மறைமுகமாக மோதிக்கொள்ளும் இந்தியா – சீனா

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை இந்தியாவிற்கு எழுந்தது.

இதனால் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்திய விமானப்படையின் புதிய விமான தளம் தஞ்சாவூரில் மே 27ம் திகதி திறக்கப்பட்டது.

சீனாவை கண்காணிக்க புதிய விமானப்படை தளத்தை அமைக்கிறது இந்தியா

இந்திய கடல் எல்லையை செயற்கைகோள் மூலம் கண்காணிக்கும் சீனா: அதிர்ச்சி தகவல்

தர்மபுரி காதல் இளவரசன் மரணம்

தமிழகத்தில் இரு வேறு சாதிப்பிரிவைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதி திருமணம் செய்து கொண்டதால் போராட்டம் வெடித்தது.

இந்த அவமானம் தாங்காமல் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்ததால், சாதிக் கலவரம் வெடித்து தமிழ்நாடே பற்றி எரிந்தது.

இதனை தொடர்ந்து மனமுடைந்த திவ்யா சில காலங்களுக்கு பிறகு, காதல் கணவனை தூக்கியெறிந்தார்.

திவ்யாவின் பிரிவால் தவித்த இளவரசன் யூலை 4ம் திகதி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தர்மபுரி கலவரத்திற்கு காரணமான காதலன் மர்மமான முறையில் மரணம்: 144 தடை உத்தரவு

இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது: உடலை வாங்க தந்தை மறுப்பு

காமுகர்கள் நிறைந்த நாடு இந்தியா

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்ததால், இந்தியா என்றாலே காமுகர்கள் நிறைந்த நாடு என்ற எண்ணம் மேலை நாடுகளில் வேகமாகப் பரவியது.

இந்தியாவில் காய்கறி மார்கெட், பேருந்து நிலையம், ஷாப்பிங் மால் என்று எங்கே ஓடி ஒளிய முற்பட்டாலும் அங்கே ஆண்களின் காமப் பெருமூச்சுகள் பெண்களை சுட்டெறித்தன.

பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை கவுன்சில் சிறப்பு தூதரை ஏப்ரல் 22ம் திகதி இந்தியா அனுப்பியது.

டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு

ஓடும் காரில் மகளை கொலை செய்ய முயன்ற தந்தை: ஜதாராபாத்தில் நடந்தேறிய விபரீதம்

பள்ளி மாணவி மூங்கில் காட்டில் கொடூரமாக கற்பழித்து கொலை

உத்தரகாண்டை உலுக்கிய வெள்ளம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் யூன் 6ம் திகதி ஆரம்பித்த வெள்ளம் பேய் அவதாரம் எடுத்தது.

சுமார் 15 தினங்களாக ஏற்பட்ட தொடர் வெள்ளத்தாலும், நிலச்சரிவுகளாலும் 10,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

மேலும் கேதர்நாத் நகரத்தில் மட்டும் 5 லட்சம் பேர் உணவு, இருப்பிடமின்றி தவிப்பிற்கு உள்ளாகினர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் நிலச்சரிவு: 60 பேர் பலி

தலைவிரித்தாடும் ஊழல்

இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது, அந்த ஊழலானது கடந்த 2013ம் ஆண்டில் விஸ்வரூபம் எடுத்தது.

கேரளாவை பரபரப்பில் ஆழ்த்திய சூரிய தகடு ஊழல் வழக்கில் ரூ.10 கோடி மோசடி அம்பலமானது.

இந்த வழக்கில் தொழிலதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், நடிகைகள் சரிதா நாயர், ஷாலு மேனன் ஆகஸ்ட் 13ம் திகதி கைது செய்யப்பட்டனர், இதில் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்கினர்.

பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ரூ.37.7 கோடி மாட்டுத்தீவன ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட லல்லு பிரசாத் யாதவ்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முதலீடு செய்வதில் இந்தியா தான் முதலிடம் என்பது அம்பலமானது.

சோலார் மோசடி வழக்கு: பிரபல நடிகை சாலு மேனன் சிக்குகிறார்

லல்லுவுக்கு 5 ஆண்டுகள் சிறை! பறிபோனது பதவி

குண்டுவெடிப்பு சம்பவங்கள்

புத்த கயாவில் உள்ள மகாபோதி கோவிலில் யூலை 7ம் திகதி 10 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரும், குஜராத் மாநில முதல்–மந்திரியுமான நரேந்திரமோடியின் பீகார் மாநிலம் பாட்னா பொதுக்கூட்டத்தை குறிவைத்து அக்டோபர் 27ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் பலியாயினர்.

மோடி பங்கேற்கும் 6 இடங்களில் குண்டுவெடிப்பு: சதி செய்தது யார்?

மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு! இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு தொடர்பா?

தனித்தெலுங்கான உதயம்

ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த போராட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யூலை 31ம் திகதி தனித்தெலுங்கானா உதயமானது.

ஆனால் இந்த தனித்தெலுங்கானவை எதிர்த்து ராஷ்ட்டிரிய ஜனதாதளம் மற்றும் தெலுங்கானா அமைப்பினர் போராட்ட களத்தில் குதித்தனர்.

தனித்தெலுங்கான விவகாரம் ஆந்திராவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா

தெலுங்கானா பிரச்னை: ஆந்திராவில் வன்முறை வெடித்தது

இயற்கையின் சீற்றங்கள்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பசலனம் காரணமாக தாழ்வு மண்டலமாக மாறி ஹெலன் புயலாக மாறி ஆந்திரமாநிலத்தை கடந்தது.

ஹெலன் புயல் பாதிப்பால் 1 1/2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டனர், மேலும் 10 பேர் பலியாகினர்.

பைலின் புயலால் ஒடிசா மற்றும் ஆந்திரா பகுதிகளில் உயிர் பலி குறைவாக இருந்தாலும், சேதம் அதிகமாக இருந்தது.

ஆந்திராவை தாக்கியது ஹெலன்: 7 பேர் பலி

ஆருஷி கொலை வழக்கு

2008ம் ஆண்டு மே மாதம் இளம்பெண் ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஆகிய இருவரும் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், சிறுமியின் தவறான நடத்தையினால் அவரது பெற்றோர்களே ஆருஷியை கௌரவக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டனர்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த இந்த வழக்கில் சிறுமியின் பெற்றோர்களுக்கு நவம்பர் 26ம் திகதி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரே குற்றவாளிகள்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

ஆட்சியை பிடிப்பது யார் காங்கிரசா? பாஜகாவா

5 மாநில சட்டசபை தேர்தல்களில் பரபரப்பான பிரச்சாரங்களுக்கு மத்தியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா மகத்தான வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு 31, ஆம் ஆத்மிக்கு 28, காங்கிரஸ் கட்சி 8 இடங்களை பிடித்து படு தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பாரதீய ஜனதா மெஜாரிட்டி பெற்றதால் வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தானின் முதலைமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.

மூன்று மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி

ராஜஸ்தானின் முதல்வரானார் வசுந்தரா ராஜே

இந்தியாவின் சாதனைகள்

ஒரு நாட்டின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதை பிற நாடுகள் அறிய வேண்டுமென்றால் அந்நாட்டின் சாதனைகள் முக்கியம், ஒவ்வொரு சாதனைகள் மூலமே உலக நாடுகளை திரும்பி பார்க்க வைக்க முடியும்.

செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை நவம்பர் 5ம் திகதி அனுப்பி வரலாற்று சாதனை நிகழ்த்தியது.

இந்த திட்டம் வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இணையும்.

செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் மங்கள்யான்

கடலின் தட்பவெப்பத்தை அறிய உதவும், ‘சரல்’ செயற்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுண்ட் டவுன் பிப்ரவரி 23ம் திகதி ஆரம்பமானது.

கடலின் தட்பவெப்பத்தை அறிய உதவும், ‘சரல்’ செயற்கோளின் கவுண்ட் டவுன் ஆரம்பம்

கடல் நீர்மட்டம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தட்ப வெப்ப நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் பி.எஸ்.எல்.வி. சி- 20 ராக்கெட் வெற்றிகரமாக பிப்ரவரி 25ம் திகதி விண்ணில் பாய்ந்தது.

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-20

கடந்து வந்த பாதையை மனதில் நிறுத்தி, வரப்போகும் வருடத்தை மகிழ்வுடன் வரவேற்போம்!..

TAGS: