நாடே நாசமாப்போச்சு! ஆவேசத்தில் கேஜ்ரிவால்

kajerival_001குடிநீர் வசதி இல்லாதது, மோசமான சாலைகள், பற்றாக்குறை மின் விநியோகம் என அனைத்து அவலங்களுக்குமே இந்த பாழாய்ப்போன அரசியல்தான் காரணம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாக கூறியுள்ளார்.

டெல்லி சட்டசபையில் கேஜ்ரிவால் அரசு இன்று நம்பிக்கை வாக்கு கோரியது. அதற்கு முன்பு நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கேஜ்ரிவால், அரசியலால் நாடே நாசமாகிக் கிடக்கிறது.

ஊழலை ஒழிக்கவே அரசியல் கட்சியைத் தொடங்கினோம் மோசமான குடிநீர் விநியோகம், மின்விநியோகம், மோசமான சாலைகளுக்கு பாழாய்ப்போன அரசியலே காரணம்.

ஊழல்வாதிகளை ஒழிப்பதில் உறுதியுடன் இருக்கிறோம். உண்மை என்றும் தோற்காது. நடுத்தர மக்கள்தான் ஆம் ஆத்மி. சாதாரண தெருவோர வியாபாரிதான் ஆம் ஆத்மி. ஊழலை ஒழிக்க விரும்பும் யாருமே ஆம் ஆத்மிதான். ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருமே மக்கள் விரோதிகள்தான்.

மேலும் நாங்கள் கட்சி ஆரம்பிப்போம் என்று ஒருபோதும் கற்பனை கூட செய்ததில்லை. நாங்கள் ஏன் தேர்தலை சந்தித்தோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த அரசைக் காக்க நாங்கள் இன்று இங்கு நிற்கவில்லை. இந்த நாடு ஊழலில் மூழ்கிப் போய்க் கிடக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆம் ஆத்மியை ஆரம்பித்தபோது நாட்டின் அனைத்து முறைகளையும் மாற்றுவோம், தூய்மைப்படுத்துவோம் என்று கூறினோம். அப்போது அனைவரும் எங்களைப் பார்த்து, தைரியம் இருந்தால் தேர்தலில் நில்லுங்கள் என்றனர். கையில் காசு இல்லாமல் எப்படி தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கிண்டல் செய்தனர்.

இன்று நாங்கள் வென்றுள்ளோம். டிசம்பர் 4ம் திகதி அற்புதத்தை மக்கள் நிகழ்த்தி விட்டனர், ஆம் ஆத்மி வென்று விட்டது என்று கூறியுள்ளார்.

TAGS: