இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள்.
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரியும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் அருகில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதெல்லாம் பார்க்க நல்லாத்தான் இருக்கு! நிஜ உருவத்தை எப்போ எரிக்க போறிங்க? ஏனா இதுவே 5 வருஷம் கழித்துதான் நடக்குது!
வாழ்க தமிழகம் ,,ராஜ பக்சாவை முதலில் போட்டு தள்ளுங்கள் ,அப்புறம் மலேசிய வாருங்கள் ஆள்தான் தூயா யாருன்னு காமிக்கிறேன்
தமிழர்கள் ஒன்றுபடவேண்டும். அவர்கள் யாருடைய மன உணர்வையும் மதிக்காமல் தாரைவார்க்கப்பட்ட கச்ச தீவை மீட்க வேண்டும் .அது தமிழக மீனவர்களின் உயிர் இழப்பை தடுக்கும் .நிம்மதி தவழும்.