சர்ச்சை எழுத்ததை அடுத்து 800 சதுர மீட்டர்களுக்கும் அதிகமான பரப்பில் பெரிய 5 அறைகளைக் கொண்ட, இருமாடி அதிகாரபூர்வ இல்லத்தில் குடிபுகும் திட்டத்தை இந்திய தலைநகர் டில்லியின் புதிய முதலமைச்சர் கைவிட்டுள்ளார்.
தனக்காக நிர்வாகம் ஒதுக்கிய பெரிய ஆடம்பர அதிகாரபூர்வ வதிவிடத்தை தனது ஆதரவாளர்கள் எதிர்த்ததாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
சிறிய வீடு ஒன்றை தனக்கு தருமாறு தான் கோரப்போவதாக அவர் கூறுகிறார்.
இந்த வீட்டை அவர் தேர்ந்தெடுத்தை அவரது அரசியல் எதிரிகளும் விமர்சித்திருந்தனர்.
ஊழலுக்கு எதிரான ஒரு செய்தியாக, அண்மையில், அவரது ஆம் ஆத்மி கட்சி டில்லி தேர்தலில் அதிகாரத்துக்கு வந்துள்ளது.
இந்திய அரசியலின் வி ஐ பி கலாச்சாரத்தில் இருந்து, அதாவது முக்கிய பிரமுகர் கலாச்சாரத்தில் இருந்து தான் விலகி இருப்பேன் என்று கேஜ்ரிவால் உறுதிமொழி வழங்கியுள்ளார். -BBC