காஷ்மீர் பண்டிட்கள்: அரசு நடவடிக்கை வெற்றி பெறவில்லை: ஒமர் அப்துல்லா வேதனை

omarஜம்மு: காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்கள் மீண்டும் அவரவர் வீடு திரும்புவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள பட்டா போரியில் நடந்த அகில இந்திய இளைஞர் காஷ்மீரி சமாஜ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஒமர் அப்துல்லா இவ்வாறு பேசினார்.

காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்களை யாரையும் வலுக்கட்டாயமாக அழைத்து வர முடியாது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்க முடியும்.25 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் பண்டிட் குடும்பங்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறினர். அவற்றில் 50 முதல் 100 குடும்பங்கள் மட்டுமே காஷ்மீர் திரும்பியுள்ளனர்.

காஷ்மீர் முழுமை அடையவில்லை:

காஷ்மீர் பண்டிட்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமை அடையவில்லை. இதை நாங்கள் எப்போதும் சொல்லிக்கொண்டேதான் இருப்போம். அவர்கள் காஷ்மீர் திரும்ப விரும்பினால் அதை முழு மனதுடன் வரவேற்கிறேன். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.

காஷ்மீரில் இருந்து, பண்டிட் குடும்பங்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதை யாரும் மறுக்க முடியாது.எனினும், அவர்களை யாரும் வலுக்கட்டாயமாக காஷ்மீருக்கு அழைத்து வர முடியாது. ஆனால் பண்டிட்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கும் என்பதை ஒமர் அப்துல்லா உறுதிபட கூறினார்.

உணர்வு பாதுகாப்பு:

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நாங்கள் உணர்வுபூர்வமான பாதுகாப்பு மட்டுமே அளிக்க முடியும். உறுதியான பாதுகாப்பு அளிக்க மூடியாது என்றார். இது குறித்து நசிர் ஆஸ்லம் வானி கூறும் போது, காஷ்மீரில் உள்ள பூங்கா, பூங்காவாக இல்லை. ஏனென்றால் பல்வேறு வகையான மலர்கள் இல்லாமல் பூங்கா எப்படி இருக்கும் என்றார்.அதை உமர் அப்துல்லா உறுதிபடுத்தினார்.அதாவது, துலிப் பூங்காவில் ஒரே வகையான மலர்கள் மட்டும்தான் உள்ளது.அதுவும் மார்ச்மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதுவும் மூடப்படும் அதுவரை ஒய்வு காலமாக அதற்கு ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் அங்கு யாரும் வர மாட்டார்கள்.

TAGS: