பெங்களூரூ: அரசியல்கட்சிகளும் அதன் தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சியியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டில்லி முதல்வரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என காங்.,மூத்த தலைவர் திக்விஜய்சிங் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பாராட்டியுள்ளார்.
மேலும் வீடுகளில் உட்கார்ந்து கொண்டு விமர்சித்துவருபவர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் நிறைய பேர் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் சட்டம் கொண்டு வர ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் அப்போதுதான் பொருளாதாரம் மேம்படும் என வேண்டுகோள் விடுத்தார் திக்விஜய்சிங். பெங்களூருவில் காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
மேலும் பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலிடமிருந்து சிக்கனம் மற்றும் பணிவு ஆகியவற்றை கற்றுகொள்ள வேண்டும் என்றார்.தேர்தலின் முக்கியவத்துவம் அறிந்து மக்கள் சட்டங்கள் பற்றிய விமர்சனங்களை அளிக்க வேண்டும் அதாவது கெஜ்ரிவால் செய்தது போல் நடவடிக்கை இருக்க வேண்டும்.
“சாலைகள் தாக்கியதன் மூலம் சட்டங்களை உருவாக்க விரும்பிய மக்கள், கடந்தகால சட்டங்கள் இயற்ற மாநில செயலாளர் தேவை உணர்ந்து அதில் ஈடுபட வேண்டும் என்றார்.எந்த ஒரு மாநில அரசும் குற்றவாளிகள் அப்பாவிகளாக இருந்தால், அவர்கள் மீது குற்றவழக்குகள் போடப்பட்டிருக்குமேயாயிவ் வழக்கை திரும்ப பெறுதல் வேண்டும். இதைதான் உ.பி.,யில் சமஜ்வாடி அரசு முசாபர்நகர் கலவரங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்றுள்ளது. அப்போது தான் நீதி நிலைநாட்டப்படும் என்றார் திக்விஜய்சிங்.