மீனவர் பிரச்சினையை சுய அரசியலுக்காக பயன்படுத்தும் ஜெயலலிதா: இந்தியா டுடே குற்றச்சாட்டு

fishermen_001இலங்கை கடற்படையால், அத்துமீறி நுழையும் மீனவர்கள் கைது செய்யப்படுதலையும், மீனவர் பிரச்சினையையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமது சுய அரசியலுக்காக பயன்படுத்துவதாக இந்தியா டுடே சஞ்சிகை குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழக மீனவர்களின் பிரச்சினையை அடுத்த கட்ட தேர்தல் நடவடிக்கையாக, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜெயலலிதா பயன்படுத்துகிறார். ஆனால், பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீனவர் பிரச்சினை தொடர்பில் ஜெயலலிதா, கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி தொடக்கம் 11 கடிதங்களை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார்.

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுமாறு வலியுறுதியிருந்தார்.

பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று என பிரதமர் பதில் அளித்திருந்த போதிலும், ஜெயலலிதா அதற்காக இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் இந்தியா டுடே குற்றம்சுமத்தியுள்ளது.

TAGS: