இலங்கையின் கரையில் இந்தியா எந்தநேரம் என்றாலும் படைகளை இறக்கலாம்?

c17-2-smallஇந்திய விமானப்படைக்காக புதிதாக வாங்கப்பட்ட போயிங்கின் ராட்சத சைஸ் விமானம் C- 17, தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்திறங்கியுள்ளது.

அதிக எடை கொண்டு செல்லக்கூடிய இந்த C- 17 விமானத்தை, ராணுவ வட்டாரங்களில் குளோப்மாஸ்டர் III என்று அழைப்பார்கள். இந்திய விமானப்படையின் புது வரவான இந்த ரக விமானம், தஞ்சையை தனது தளமாக கொண்டு இயங்க போகிறது என்பதே, தற்போதுள்ள திட்டம்.

இந்தியாவின் தெற்கு எல்லைப்புற பாதுகாப்புக்காக தமிழகத்தில் இரு விமானத்தளங்கள் நீண்ட காலமாக இருந்துவந்தன (கோவை அருகே சூலூர், சென்னையை அடுத்த தாம்பரம்). அதன்பின், தமிழக கரையோரப் பகுதிக்கு அண்மையில் மற்றொரு விமானத்தளம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ரூ150 கோடி செலவில் தஞ்சையில் புதிய விமானத்தளம் உருவானது.

இந்திய பாதுகாப்பு திட்டமிடலில், தஞ்சை தளத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது என்பதை, C- 17 விமானத்தை தஞ்சை தளத்துக்காக “அசைன்” பண்ணியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவின் தெற்கு எல்லைக்கு அருகேயுள்ள இலங்கையில், சீனா அதிகம் நெருக்கம் காட்டுவதை அடுத்து, சமீப காலங்களில் தெற்கு எல்லையை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சு. அதன் ஒரு பகுதிதான், ராட்சத சைஸ் துருப்பு காவி விமானம் ஒன்றை தமிழகத்தில் உள்ள விமாக தளம் ஒன்றுக்கு அசைன் செய்துள்ளனர்.

அதவது தஞ்சாவூர் தளத்தில் இருந்து தான் இனி இந்த ராட்சத விமானம் இயங்கும். போ ஒன்று மூண்டா, அதில் இலங்கையை சீனா தனது தளமாகப் பயன்படுத்தினால், அவ்விடத்திற்கு அதிக இந்திய இராணுவ வீரர்களை, ஒரே நேரத்தில் கொண்டுசெல்ல இந்த C- 17 விமானம் உதவும்.

இதுவே இந்திய அரசின் திட்டமாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் இலங்கையின் ஒவ்வொரு நகர்வுகளையும் இந்தியா நன்கு அவதானித்து செயல்பட்டு வருகிறது என்பது தற்போது நன்றாகத் தெரிகிறது.

TAGS: