மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்லாசோல் என்ற கிராமத்திற்கு திடீரென்று சென்று பார்வையளித்துள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு மிட்னாபூரில் ஒரு பேரணியில் கலந்து கொள்ள வந்திருந்தார். பேரணி முடிந்து அம்லாசோல் கிராமத்திற்கு திடீரென வருகை புரிந்தார்.
இக்கிராமத்தில் தான் இடதுசாரிகள் ஆட்சியில் 2004ம் ஆண்டு பட்டினியால் நிறைய பேர் இறந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் முதல்வர் ஒருவர் இந்த கிராமத்திற்கு வருவது இதுவே முதல்முறை.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், 2004ம் ஆண்டு இடதுசாரிகள் ஆட்சியில் பட்டினியால் பலர் இறந்தனர். எங்கள் ஆட்சியில் அவ்வாறு நடக்க விடமாட்டோம்.
நெடுந்தொலைவில் உள்ள இக்கிராமத்திற்கு அனைத்து அரசு அதிகாரிகளும் வந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபடுவர் என்று கூறியுள்ளார்.