அரசுத் துறைகளில் நிலவும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களுக்கு 011-27357169 என்ற “ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் தில்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்தார்.
இது தொடர்பாக தில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தில்லிவாசிகள் அனைவரையும் ஊழல், லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்பாளர்களாக மாற்றும் வகையில், இந்த “ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க விரும்புவோர் இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிக்கும் போது, புகார்தாரரின் பெயர், எண் உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.
இத் தகவல்களின் அடிப்படையில் தில்லி பிரதேச கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் தொடர்பு கொண்டு, லஞ்சம் கேட்கும் அதிகாரிகளைப் பொறிவைத்து பிடிக்க உதவி செய்வார்கள். இத் தொலைபேசி எண் காலை 8 மணி இரவு 10 வரை செயல்பாட்டில் இருக்கும்.
சாதாரணக் குடிமக்களும் லஞ்சம் ஒழிப்பில் ஈடுபட வேண்டும். அவர்களைக் கண்டு அரசு அதிகாரிகள் அச்சமடைந்து, தனது பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே இத் தொலைபேசி எண் அறிவித்திருப்பதன் நோக்கம்மாகும்.
லஞ்சம் பெறும் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்த “ஹெல்ப் லைன்’ குறித்து தில்லி முழுவதும் விரிவாக விளம்பரம் செய்யப்படும் என்றார் அரவிந்த் கேஜரிவால்.
ஆம் ஆத்மி கட்சிக்கு உள்நாடு,வெளிநாடில் இருந்து 5கொடி நிதி சேர்ந்துள்ளதாம்,பணம் என்றால் பிணமும் வாயை திறக்குமாம் நீங்க எப்படி?