இலங்கை – இந்திய மீனவர்களை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ள ஆலோசனை!

indian_fishermansஇலங்கையுடன் பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழ், இரண்டு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பறிமாற்றிக் கொள்வது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரியப்படுத்தி இருப்பதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 275க்கும் அதிகமான மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தமிழகம், ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இலங்கையைச் சேர்ந்த 223 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை புரிந்துணர்வின் அடிப்படையில் பறிமாற்றிக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சுக்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக டீ.ஆர்.பாலு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: