தமிழ்நாட்டில் சோலார் பம்ப்செட், சோலார் சைக்கிள் ஆகியவற்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.
இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது.
மேலும் “இளம் அறிவியல் அறிஞர் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானிகள் சோலார் பைக்கை சோதனை செய்து ஆராய்சிக்காக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராஜேஷின் எதிர்கால லட்சியம் இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளியில் இருந்து நிறையக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவிற்கு சேவை செய்வது என்பதாகும்.
நன்று! கண்ணா! நன்று! உன்னைப் போன்ற கண்டுபிடிப்பாளர்கள் தான் வருங்கால இந்தியாவிற்குத் தேவை. நீ தமிழனின் பெருமையை நிலை நாட்ட வேண்டும்! வாழ்க! வளர்க!