ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன்: 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள்

kejriwalதில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ள ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனுக்கு 7 மணி நேரத்தில் 4000 அழைப்புகள் வந்துள்ளதாக அப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 011-273571 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக புகார் தெரிவிக்கலாம். இதில் வரும் மிக அவசியமான அழைப்புகள், 15 பேர் கொண்ட குழுவிற்கு கால் மாற்றம் செய்யப்பட்டு விசாரிக்கப்படும்.

பின்னர் அவர்களுக்கு எவ்வாறு ஸ்டிங் ஆப்ரேசன் மூலம் கடும் நடவடிக்கை எடுப்பது என்பது அறிவுறுத்தப்பபடும்.  ஸ்டிங் ஆப்ரேசன் மூலம் கிடைக்கும்  ஆதாரங்கள் ஊழல் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்படும் என்று ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.

TAGS: