நடிகையான காஷ்ட்யூம் டிசைனர்

arunநடிகர் அருண்பாண்டியனின் அண்ணன் துரை பாண்டியனின் மகள் சுந்தரி. இவர் பேஷன் டிசைனிங் படித்து விட்டு ஷிவானி படத்தின் மூலம் சினிமாவிற்கு காஷ்ட்யூம் டிசைனராக வந்தார். அதன் பிறகு நடிகையாகிவிட்டார். ஸ்ரீகாந்த் நடிக்கும் ஓம் சாந்தி ஓம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

தற்போது நகுல் நடிக்க இருக்கும் எண் ஒன்றை அழுத்தவும் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

“முதலில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்தது. நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தேன். இப்போது அடுத்து படமும் வந்து விட்டது.

இரண்டிலுமே காமெடி கலந்த கேரக்டர். தொடர்ந்து காமெடியாக நடித்து காமெடி நடிகையாகும் எண்ணம் இல்லை. ஹீரோயினாக நடிக்க நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து காஸ்ட்யூம் டிசைனிங்கும் செய்வேன்” என்கிறார் சுந்தரி.