மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தபோதும், இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கும் பணி தொடர்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ராணுவ நவீனமயமாக்கலுக்காக 3.25 லட்சம் கோடி ரூபா செலவீடப்பட்டிருக்கிறது.
2013-2014ஆம் ஆண்டு பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்ட 2.3 லட்சம் கோடி ரூபா நிதியில், ராணுவத்தை நவீனமயமாக்கும் பணிக்காக இதுவரை 82 சதவீத தொகை செலவிடப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகையும், இன்னும் ஒரிரு வாரங்களில் செலவிடப்பட்டுவிடும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை செலவிடப்பட்ட நிதியைக் கொண்டு, பத்து சி-17 கனரக விமானங்கள், 12 சரக்கு போக்குவரத்து விமானங்கள், 12 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள், அகுலா 2 நீர்மூழ்கி கப்பல், சூ-30எம்.கே.ஐ. விமானம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இது தவிர்த்து, இந்தியாவில் சொந்தமாக உருவாக்கப்பட்ட தேஜஸ் விமானம் மற்றும் மிக் 2000 போர் விமானத்தை நவீனமயமாக்கவும் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011-2012, 2012-2013ஆம் ஆண்டுகளிலும் ராணுவ நவீனமயமாக்கல் பணிக்காக 1.38 லட்சம் கோடி ரூபா செலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் எவ்வளவு யார்2 பைக்குள்ளும் கைக்குள்ளும் போனதோ…?! ஊழல் அற்ற இந்தியாதானே…!!
இந்திய பேடி அரசாங்கத்திற்கு பயம் வந்து விட்டது! கற்று கொடும் இனம் தமிழ் இனம்! நாங்கள் கற்று கொடுத்ததுதான் இன்று உலகமுழுவதும்! 18 சித்தர்களும் தமிழர்கள்! தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
TIMES NOW தொலைகாட்சியை பாருங்கள். இந்தியாவின் வண்டாவலம் தெள்ள தெளிவாக எல்லாம் புரியும், மட்ட ரக மானம் கெட்ட மடையர்கள். சீனாவைப்பார்தாவது தெரிந்து கொள்ள முடியாதா–எல்லாம் ஊழல் வாதிகள். கையாலாகாத முட்டாள்கள். எல்லாம் அதே குட்டையில் ஊறிய மட்டைகள்.
என்று இந்தியா முன்னுக்கு வருகின்றதோ அன்று தான் நமக்கு மரியாதை.ஒருகால கட்டதில் சீனாவை பெயர் சொல்வதற்கே சீனர்கள் கூச்சப்பட்டார்கள் ஆனால் இன்று ? கதையே வேறு– எல்லாரையும் ஆட்டிப்பார்கின்றது
இதிலிருந்து எல்லாமே புரியவேண்டும்