இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு என்பதால், அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மனிதகுல வரலாற்றில் எந்தவொரு தேசிய இனத்துக்கும் இழைக்கப்படாத கொடுமையும், படுகொலையும் இலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு பேரினவாத சிங்கள அரசால், இந்திய காங்கிரஸ் அரசின் துணையோடு நடத்தப்பட்டது.
துன்ப இருளில் இன்னமும் தவிக்கும் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க, விடியலின் வெளிச்சத்தை அவர்கள் காண, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும்.
எனவே, அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இப்பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம்.
வருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தாய்த் தமிழகத்திலும், தமிழ் ஈழத்திலும், தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கு நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அததெல்லம் சரி! தனி ஒரு மனிதனாக அந்த வேண்டுகோளை விடு! திருடர்கள் கட்சி,திருடிகள் எல்லாம் வேண்டாம்!திருடர்கள் திராவிடன் என்ற போர்வையில் தமிழர் மக்களுக்கு செய்த துரோகம் பொது! தனி தமிழர் நாடு,தனி தமிழ் ஈழம் காலத்தின் கட்டாயம்! எந்த கொம்பனும் இனி தடுக்க முடியாது!
அய்யா உங்களின் எண்ணம் நிறைவேற நாங்கள் துணை நின்று வேண்டுகிறோம் .வாழ்துக்கள் .