பிரதமர் பதவிக்கு தயார்! ராகுல் அதிரடி

rahul-Gandhi_002கட்சி தலைமை பிரதமர் பதவி கொடுத்தால் அதை ஏற்க தயார் என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வருகின்ற 17ம் திகதி காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நாட்டின் ஒற்றுமையை காக்க முடியும். ஆம் ஆத்மியின் பல கொள்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. பா.ஜ.க. தனிநபரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தனிநபர் ஒருவரை நம்பி நாடு செல்ல முடியாது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை, எனக்கு பிரதமர் பொறுப்பு கொடுத்தாலும் அல்லது வேறு எந்த பதவி கொடுத்தாலும் ஏற்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

TAGS: