ஆம் ஆத்மி கட்சி அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்!

somnathஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலை ஓழிப்போம் என்ற கோஷத்துடன் களம் இறங்கி ஓராண்டில் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி,  116 கோடி ஊழல் வழக்கில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

இந்த வழக்கில் தனது தரப்பினருக்கு ஆதரவாக  ஆதாரத்தை திருத்த முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தில்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி கூறுகையில் ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்துள்ளது மிகவும் ஆட்சேபனைக்குரிய நெரிமுறையற்ற செயல் என்று கண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் த்ற்போது வெளியாகியுள்ளநிலையில் , இது குறித்து பேசிய கெஜ்ரிவால், நீதிமன்றத்தின் கருத்து தவறு என்றார். இந்நிலையில் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி உடனடியாக பதவி விலக வேண்டும், அல்லது கெஜ்ரிவால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக மற்றும காங்கிரஸ் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGS: