இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 லட்சம் வெள்ளி சந்தன சிலைகளை அமெரிக்க அரசு ஒப்படைத்தது

silaiவாஷிங்டன் : இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 55 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சந்தன சிலைகளை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது.

சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். தமிழகம் உட்பட பல்வேறு மாநில கோயில்களில் உள்ள பழங்கால சிலைகளை கடத்தி சென்று நியூயார்க் நகரில் கடை வைத்து விற்று வந்தான். தமிழக போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கபூர் சிக்குவதற்கு முன்பாக, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்தும் சிலைகளை திருடி, தாய்லாந்து, ஹாங்காங் வழியாக அமெரிக்காவுக்கு கடத்தினான். தமிழக போலீசார் இவனை கைது செய்த பிறகு, இந்த சிலைகளை சர்வதேச போலீசார் (இன்டர்போல்) கைப்பற்றினர். தற்போது, இந்த சிலைகளை இந்தியாவிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.

இதற்காக நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில், 55 லட்சம் வெள்ளி மதிப்புள்ள லட்சுமி, விஷ்ணு, பார்வதி, போதிசத்துவர் ஆகியோரின் சந்தன சிலைகளை இந்திய தூதரக அதிகாரி தியானேஸ்வர் முலாயிடம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த சிலைகள் ஒவ்வொன்றும் 159 முதல் 272 கிலோ எடை உள்ளவை.இந்திய பெண் தூதரக அதிகாரி தேவயானி கோபர்கடே கைது விவகாரத்தால் இந்திய – அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

TAGS: