இந்தியாவை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களை ராகுல் காந்தி தலைமையேற்று நடத்துவார் என்று இன்று அறிவித்துள்ளது.
எனினும் பலரும் எதிர்பார்த்தபடி அவரை காங்கிரஸ் கட்சியின் பிரதர் வேட்பாளர் என்று நேரடியாக அறிவிப்பதை கட்சி தவிர்த்துக் கொண்டது.
தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார் என காங்கிரஸின் பேச்சாளர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்துள்ளார்.
மோடிக்கு எதிராக யார்?
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவுள்ள நிலையிலும், காங்கிரஸ் கட்சி ஏகப்பட்ட ஊழல்களில் சிக்கியுள்ளதாலும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு மிகக்குறைந்த இடங்களே கிடைக்கக் கூடும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, குஜராத் மாநில முதலவர் நரேந்திர மோடியை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள சூழலில், 43 வயதாகும் ராகுல் காந்தியை தமது கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு அழுத்தங்கள் அதிகரித்தன.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கட்சி அறிவிக்காமல் இருப்பது, அதனால் ஏற்படும் எதிர்கால அரசியல் பின்னடைவுகளில் இருந்து அவரை காப்பாற்றும் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்று செய்தியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். -BBC
இது ஒரு கருப்பு தினம் …..
ராகுல் பிரச்சார பீரங்கியா ?பிரச்சனை பிரங்கியா ?தன் கட்சி மவுன பிரதமரை நான்சன்ஸ் என்று சொல்லி விட்டு மன்னிப்பு கேட்டவர் !
உன் அப்பனே திரும்ப வந்தாலும் ஒன்னும் வாசிக்க முடியாது!