காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எந்த காந்தியை அறிவித்தாலும், காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜக எம்பி மேனகா காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரசிலும் பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்க வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
‘எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்க தயார்’ என்று ராகுல் காந்தியும் பேட்டி அளித்துள்ளார்.இந்நிலையில், பாஜக கட்சி எம்பியும், ராகுலின் சித்தியுமான மேனகா காந்தி நேற்று கான்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது நிரூபர்களிடம் பேசிய அவர், ‘மன்னர் எதை தொட்டாலும் அது தங்கமாகும்’ என்பது போல ஒரு காலத்தில் காங்கிரசில் சிறந்த தலைவர்கள் இருந்தனர். இப்போது அப்படிப்பட்ட ஒருவர் கூட காங்கிரசில் இல்லை.
காங்கிரஸ் கட்சி, எந்த காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும் அதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது. காங்கிரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது.
மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் மக்களுக்கு நிறைய வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியை பிடித்து விட்டு, இப்போது மக்களை முட்டாளாக்குகின்றனர் என்றும் டெல்லியில் பாஜக ஆட்சியமைத்திருந்தால் நல்ல ஆட்சியாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.
உன் பெயருக்குப்பின்னாலும் காந்தி ,உன் பிள்ளைகள் பெயருக்குப்பின்னாலும் காந்திதான் ஆகவே , உன் பிள்ளைகளுக்கும் உன் சாபம் தொடரும் ! சூநியக்காரியே தொடரும்!
ஈழ மக்கள் படுகொலையை நடத்திய காங்கிரேசுக்கு அழிவு நிச்சயம்!