தமிழ் நிபுணர்களின் மாநாடு தமிழகத்தில் நடைபெறவுள்ளது

summit_001தமிழகத்தில் இயங்கும் தமிழ் கலாசாரத்துக்கான நிலையம் மூன்று நாள் சர்வதேச மாநாட்டை நடத்துகிறது.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் உலகளாவிய ரீதியில் செயற்படும் 35 தமிழ் நிபுணர்கள் பங்கேற்கின்றனர் என்று தமிழ் கலாசாரத்துக்கான நிலையத்தின் நிறுவுனர் நல்லா ஜி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இருந்து ஆர் கார்த்திகேசு, சண்முக சிவா, முத்து நெடுமாறன், கனடாவில் இருந்து ஏ முத்துலிங்கம் மற்றும் சீரன், அவுஸ்திரேலியாவில் இருந்து எஸ் பொன்னுத்துரை, பிரான்ஸில் இருந்து நாகரத்னம் கிருஸ்ணா, ஜெர்மனில் இருந்து உல்ரிச்சி நிக்கலொஸ், சீனாவில் இருந்து கலைமகள், சிங்கப்பூரில் இருந்து சீதாலக்சுமி, அழகையா பாண்டியன் ஆகியோர் இந்த பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது 7 அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் சர்வதேச ரீதியாக தமிழ் இலக்கியம், ஊடகம் தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன என்று மாநாட்டு ஏற்பாட்டாளரான சிரேஸ்ட ஊடகவியலாளர் மாலன் தெரிவித்துள்ளார்.

TAGS: