மோடியால் முடியாது: காங்கிரஸ் பதிலடி

modi-01Aகுஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி நேற்று பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மாக்கன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பாஜக அறிவிக்கும் பிரதமர் பதவி வேட்பாளர் யாரும், பிரதமர் ஆனது கிடையாது. அவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டியதுதான். பிரதமர் பதவி வேட்பாளராக எல்.கே. அத்வானியை முன்பு அறிவித்தனர். அவர் இன்னும் பிரதமராவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்.

டெல்லி முதல்வர் பதவி வேட்பாளர்களாக ஹர்ஷவர்த்தன் மற்றும் விஜய் மல்ஹோத்ராவை பாஜக அறிவித்தது. அவர்களும் காத்திருக்கின்றனர்.

அதேசமயம் காங்கிரஸ் கட்சியோ இதுவரை பிரதமர் பதவி வேட்பாளரையோ, முதல்வர் பதவி வேட்பாளரையோ அறிவித்தது கிடையாது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாக பிரதமராகவும், முதல்வர்களாகவும் ஆகி விடுகின்றனர்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் 100 புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் அவர் பேசி வருவது தெரிய வருகிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 2,234 நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மாக்கன் தெரிவித்தார்.

TAGS: