பெண்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ்

ramados01அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் சென்னை மந்தை வெளியில் இன்று நடந்தது. கூட்டத்தில் 33 சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ராமதாஸ் பேசும் போது,   ‘’இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய தலைவர்கள தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை என்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

* காதல் நாடக திருமணங்களால் பெற்றோரும், ஏமாற்றப்படும் இளம் பெண்களும், துயரப்படுகிறார்கள். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த திருமணங்களை செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும்.

என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TAGS: