எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

rahman-newalbum-bigபஞ்சாபி மொழியில் பாடியதற்காக எனக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று வருத்தமுடன் கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தென்னிந்திய மொழிப்படங்களுக்கு இசை அமைத்து பாடல் பாடியதுடன் இந்தியில் ஏராளமான படங்களுக்கு இசை அமைத்து பாடலும் பாடி இருக்கிறார். தனக்கு பிடித்தமான பஞ்சாபி மொழியில் பாட சமீபத்தில் வாய்ப்பு வந்ததும் அதை ஏற்று பாடினார். இது பற்றி ரஹ்மான் கூறியதாவது: இம்தியாஸ் அலி இயக்கும் ஹைவே இந்தி படத்துக்காக மாஹிவே என்ற பாடலை பஞ்சாபி மொழியில் பாடினேன்.

இந்தியைவிட இந்த மொழி எளிதாகவே இருந்தது. முதன்முறையாக பஞ்சாபி மொழியில் நான் பாடி இருக்கிறேன். ஆனால் யாருமே என்னை பாராட்டவில்லை. பஞ்சாபி மொழிக்கு நான் ரசிகன். நுஸ்ரத் பதே அலி கான் பாடல்களை கடந்த 25 வருடங்களாக கேட்டு வருகிறேன். அதுவே என்னை பஞ்சாபி மொழி மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.