ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏ நீக்கம்

vinod_kumar_binnyஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ வினோத் குமார் பின்னியை நீக்கி அக்கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக அக்கட்சியின் முதல்வர் கேஜரிவால் தலைமையிலான அரசை பின்னி தொடர்ந்து விமர்சித்துவந்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஆம் ஆத்மி அரசைக் கண்டித்து இம்மாதம் 27ஆம் தேதி (திங்கள்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போதவாகவும் கூறிவந்தார்.

அதையடுத்து, கட்சிக்கு விரோதமாக கருத்து தெரிவித்ததாக, விளக்கம் கேட்டு அவருக்கு ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு நோட்டீஸ் அனுப்பியது. அதைப் பெற்றுக் கொண்ட அவர் கட்சி விதிகள் கூறுவது என்ன என்பதை அறிய, அதன் நகலை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தார். மேலும், எந்த விதியின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கும்படியும் கேட்டிருந்தார்.

“கட்சியிலிருந்து நீக்கினாலும், தேர்தலில் ஆம்ஆத்மி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராடுவேன்’ என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

TAGS: