மகாத்மா காந்தியின் பேத்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ila_gandhiதென் ஆப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்டத்துக்கு தனது பெரும் பங்களிப்பை வழங்கிய மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அந்த நாட்டு அரசு கெüரவித்துள்ளது.

விருது பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேரில் மகாத்மா காந்தியின் பேத்தி இலா காந்தியும் ஒருவராவார். மற்ற இரண்டு பேரில் ஒருவர் சன்னி சிங், மற்றொருவர் மெக் மகராஜ் ஆவார்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவில் அவர்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஜனநாயக முறையில் கடந்த 1994ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா அதிபராக தேர்தெடுக்கப்பட்ட பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டக் குழுவினர் அந்த நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவில் இணைக்கப்பட்டனர்.

இந்த விருது கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலா காந்தி, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டக் குழுவில் தாம் உறுப்பினராக இடம் பெற்றிருக்கவில்லை;ஆனால், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றை பீனிக்ஸ் குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ர்பனில் தங்கியிருந்தபோது இனப் பாகுபாட்டுக்கு எதிராக மகாத்மா காந்தி அந்தப் பகுதியில் போராடினார்.

ஆப்பிரிக்க விடுதலைப் படையில் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பாக சேர்ந்த சன்னி சிங், தமக்கு விருதுகள் எதுவும் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில்லை.

இந்நிலையில், ஆப்பிரிக்க அரசு விருது வழங்கி கெüரவித்துள்ளது பெருமகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது,தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் செய்தித் தொடர்பாளராக பணிபுரிந்து வரும் மெக் மகராஜ், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ராபன் தீவில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது மகராஜ் அங்கு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: