புதுடில்லி: குற்றப்பின்னணி கொண்ட எம்.பிக்களை எதிர்த்து வரும் பொது தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட போவதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கிரிமினல்களை எதிர்த்து போட்டி:
தற்போதுள்ள எம்.பிக்களில் சுமார் 162 பேர்கள் மீது கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்களை போன்று கிரிமினல் பி்ன்னணி கொண்ட எம்.பிக்களை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 73 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தப்பட உள்ளனர்.
இதற்காக புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் 73 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ப்பு:
கடந்த 26-ம் தேதியுடன் பழைய உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் ஒரு கோடியே 5 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் தேர்தல் போட்டியிடவும், மற்றும் பிற மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் விதமாக வும் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அதன் உறுப்பினர் சேர்க்கை குறியீடான ஒரு கோடி பேர் என்பதை காட்டிலும் ஐந்து லட்சம் உறுப்பினர் அதகமாகவே உள்ளதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
நேரடி விண்ண்பங்கள் மூலம் 76 லட்சம் மக்களும் ஆன்லைன் மூலம் 7 லட்சம் மக்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் 5லட்சம் மக்களும் கட்சியில் சேர்ந்துள்ளனர். புதிய உறுப்பினர் சேர்க்கை வரும் பார்லி தேர்தல் வரை தொடரும். மேலும் கட்சியில் ஓபாமா, ராகுல் பெயரில் போலியான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது வெளியானதை அடுத்து உறுப்பினர் விவரம் குறித்து சரிபார்க்க தனி ஒரு குழுவை நியமிக்க்கப்பட்டுள்ளதாகவும் போலியான தகவல்கள் கொண்ட பெயர்கள் நீக்கப்பட்டுவருவதாக கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் சுமார் 30% lok sabha உறுப்பினர்கள் அநேகமாக உள்ளே இருக்க வேண்டியவர்கள்; இன்னும் வெளியே இருந்து பாமர மக்களை ஏய்த்து அரசியல் நடத்தி …….! செய்து விட்டு இன்னும் மாட்டிக்கொள்ளாதவர்கள் வேறு….!! ஊழலில் மாட்டும் ஒரு அரசியல் வாதியின் கேஸ் கூடினப்பட்சமாக 6 மாதத்தில் முடியவேண்டும் எனும் சட்ட மாற்றம் வந்தால் இது போன்ற திருட்டுக் கழுதைகள் அந்த சபைக்குள் செல்ல உரிமை இழந்து இருக்க வேண்டிய அறைக்குள் இருப்பர். ஆனால் இது போன்ற சட்டம் வந்துவிடக்கூடாது என இப்போது இருக்கும் almost எல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் வரிந்துகட்டிக்கொண்டு உள்ளன. நல்ல மாற்றம் கொண்டுவர முயலும் ஆம் ஆத்மியை கடித்துக் குதற காத்திருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல் முக்கிய ஊடகங்களும் தாளம் போடுகின்றன…!! ஏன்…?! எதனால்…?! மக்களை கொள்ளையடித்து குபேரர் ஆகா…, இங்கு போல்தான்..!!