ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தமிழகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியைப் பிடித்துக் கொடுக்கும் முதல் 10 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருநெல்வேலி, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை பிடித்துக் கொடுத்த நபர்களுக்கு ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் ஏற்கனவே தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை பிடித்துக்கொடுத்த சந்திரசேகர் என்ற விவசாயிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகிகள் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மிக2×2 பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்தியாவின் எண்ணில் அடங்காத் தீமைகள் அகல இந்த மிகக் கொடிய, புரையோடிய புற்றுநோய்க்கு உரிய பரிகாரம் காண்பது மிக2 அவசியம். இல்லையென்றால், தலைவர்களுக்குக் கொண்டாட்டம்; சாதாரண பாமர மக்களுக்கு எல்லையற்ற திண்டாட்டம். ஜெக்ரிவாலின் செய்கையால் கூத்தாடி அம்மா கலங்கி, மிரண்டுபோய் உள்ளார் போல் இருக்கு. எதுவோ நல்லது நடக்குது. பாராட்டுகள். தொடரட்டும் இது. ஒழிக இலஞ்சமும் இலஞ்ச வாதிகளும்.