இலங்கைக்கு கப்பல் விற்பனை: தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கோரியுள்ளது!

shipAAஇலங்கைக்கு இரண்டு கப்பல்களை விற்பனை செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள நிலைப்பாடு குறித்து தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சென்னை மேல்நீதிமன்றத்தின் மதுரை கிளை கோரியுள்ளது.

இலங்கைக்கு கப்பல்களை விற்பனை செய்யக்கூடாது என்றுக்கோரி சட்டத்தரணி பி ஸ்டாலின் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே இந்திய மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் தாக்கி வரும் நிலையில் இந்த கப்பல் விற்பனை நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி தமிழக அரசாங்கம் குறித்த கப்பல் விற்பனையை கைவிடுமாறு மத்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது. எனினும் மத்திய அரசாங்கம் பதில் எதனையும் வழங்கவில்லை.

இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய அரசாங்கத்தின் உதவி செயலாளர் மயாங் ஜோசிää எதிர்மனுவை தாக்கல் செய்தார்.

அதில் இலங்கைக்கு போர்க்கப்பல்களை அல்ல ரோந்து கப்பல்களையே விற்பனை செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம் இந்திய மீனவர்களின் பாதுகாப்பை இந்திய கடற்படை கவனிக்கும் என்றும் எதிர்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் தமிழக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு உத்தரவிட்டது.

TAGS: