ஆபத்தான நகரமாக மாறும் டெல்லி

delhi_town_001உடல் நலக்குறைவு உள்ளவர்கள் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக புதிய ஆய்வுத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் டெல்லியின் மோசமான அளவிடமுடியாத மாசு அவர்களது உடல்நிலையை மேலும் மோசமாக்குகிறது.

இதற்கு முன்னர் மிகவும் மாசுபட்ட நகரமாக சீனாவின் பீஜிங் நகர் இருந்தது. தற்போது அந்த இடத்தை டெல்லி பிடித்துள்ளது.

யேல் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் செயல்திறன் அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

உலகின் 178 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா சுற்றுச்சூழல் மாசுபாட்டில் 155வது இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் காற்று மாசு படுவதில் இந்தியா 174வது இடத்தை பிடித்துள்ளது என்ற தகவல் மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை தலைவரான சுனிதா நரெய்ன்,

இந்த விவகாரத்தில் சீனாவை நாம் பின்னுக்கு தள்ளியது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால் அந்நாடு காற்று மாசுபடுவதை குறைக்க துரித நடவடிக்கை எடுத்து வருவதால் அங்கு சற்று சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அங்கே சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டேயிருக்க இங்கேயோ அது இன்னும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பது ஆய்வில் தெளிவாக தெரிகிறது.

இது முற்றிலும் உண்மையான தகவலாக தான் இருக்கமுடியும். ஏனென்றால் தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் ரெயில்களில் நாம் அங்கு செல்லும்போது அந்நகரை அடைவதற்கு 50 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தே அங்கே ரெயில் பாதையின் ஓரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கும். நாம் பயணம் செல்லும் ரெயிலின் வேகத்தில் அக்குப்பை பறந்து வந்து நம்மையும் குப்பையோடு குப்பையாக்கி விடுகிறது என்பதில் துளியும் ஐயமில்லை.

TAGS: