புதுடெல்லி, பிப். 1–டெல்லி முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் ஊழல் தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் பேசினார்.
அவரது ஊழல் பட்டியலில் பாரதீய ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்காரி பெயர் இடம் பெற்றது. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு நிதின் கட்காரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், நீங்கள் வெளியிட்ட ஊழல் தலைவர்கள் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. இது தவறான தகவல். அடிப்படை ஆதார மற்ற குற்றச் சாட்டு.
இதற்காக 3 நாளில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் ‘‘இல்லையெனில் கோர்ட்டு மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிரிமினல் வழக்கு தொடரப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகள் எவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்ட வரலாறு அபூர்வம்.