டெல்லியில் லோக்பால் மசோதா நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்துக்கு ரூ.50 லட்சம் செலவாகும்

lokpallபுதுடெல்லி, பிப். 1–ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர அன்னா ஹசாரேயுடன் இணைந்து டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார்.

லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறியது. இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இதற்காக டெல்லி சட்ட சபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இது வரலாற்று சிறப்பு மிக்க மசோதா என்பதால் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் சட்ட சபையின் சிறப்பு கூட்டம் வருகிற 16–ந் தேதி நடை பெறுகிறது.

அங்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் கூடும் வகையில் சட்டசபை கூட்டம் அரங்கு அமைக்கப்படுகிறது. முன்பு அரசு ராம்லீலா மைதானத்தில் சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அங்கு அதற்கான வசதிகள் இல்லாததால் இந்திராகாந்தி உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாற்றப்பட்டது.

சட்டமசபையின் சிறப்பு கூட்டத்தை வெளியில் நடத்துவதற்கு அரசுக்கு ரூ. 50 லட்சம் செலவாகும். ஆனால் இந்த கூட்டத்தை சட்டசபை கட்டிடத்தில் நடத்தினால் ரூ. 1 லட்சம் தான் செலவாகும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையே டெல்லி சட்டசபை கட்டிடத்தை மாநில பொதுப்பணித்துறை மூலம் ரூ. 2 கோடி செலவில் புதுப்பிக்க கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.

இதில் இருக்கை வசதிகள் மாற்றப்பட்டு மேற்கூரைகள் புதுப்பிக்கப்படுகிறது.

TAGS: