இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை – இந்திய மீனவர்கள் 19 பேர் கைது

navy_sea_001இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடக் கூடாது என இலங்கைக் கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதன் பின்னரும் சில இந்திய மீனவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் கைது செய்ய நேரிடும். அண்மையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

தடை செய்யப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்திய மீனவர்கள் 19 பேர் கைது

சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்த மேலும் 19 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறைக்கு அருகில் உள்ள கடலில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் 5 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறில 38 இந்திய மீனவர்கள் அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: