தளபதியின் மனிதாபிமானம்

stalin_001கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய தம்பதியினரின் உயிரை திமுக பொருளாளர் ஸ்டாலின் காப்பாற்றியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30 மணிக்கு, பேரவைக்கு காரில் கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டு இருந்தார். லேடி வெலிங்டன் கல்லூரி அருகே எதிர்திசையில் வந்த ஒரு ஸ்கூட்டர் மீது, வேன் லேசாக உரசியது. இதனால் ஸ்கூட்டரில் பயணம் செய்த தம்பதிகள் தடுமாறி ரோட்டில் விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைக் கண்டதும் மு.க.ஸ்டாலின், தனது காரை நிறுத்தி இறங்கினார். விரைந்து சென்று காயம் அடைந்த தம்பதிகளை, உதவியாளர்கள் உதவியுடன் தூக்கிச் சென்று நடைபாதையில் அமர வைத்தார். பின்னர் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத் தார். உதவியாளர் மூலம், 108 அவசரஊர்திக்கு போன் செய்து தெரிவித்தார்.

ஸ்கூட்டரில் வந்த முருகன், மனைவி பானுமதியை லேடி வெலிங்டன் கல்லூரியில் பி.எட். வகுப்புக்கு செல்ல அழைத்து வந்ததாக கூறினார். சிறிது நேரத்தில் 108 அவசரஊர்தி வந்ததும் அதில் தம்பதியை, ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்களின் தொலைபேசி எண்ணை குறித்துக் கொண்டு பின்னர் நலம் விசாரித்தார்.

மு.க.ஸ்டாலின் சாலையில் நின்று மனிதநேயத்துடன் உதவி செய்ததைப் பார்த்த பொதுமக்கள் அங்கே திரண்டனர். அவர்களிடம் விடைபெற்று ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

TAGS: