இஸ்லாமாபாத்: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,எளிமையான மற்றும் கவர்ச்சியற்ற இந்திய அரசியல்வாதி என பாகிஸ்தான் பத்திரிகை தெரிவித்துள்ளது.டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நடந்தது.
அதன் பின்னர் கெஜ்ரிவாலை இவ்வாறு வர்ணித்தது அந்த பத்திரிகைகள்.கெஜ்ரிவால் இந்தியா ஒளிர்கிறது என்ற கனவுகள் மூலம் இந்தியாவின் புதிய விண்கல்லை துவக்கத்தில் பெற்ற அரசியல்வாதியாக வலம் வந்தார்.அவர் மப்ளர் அணிந்த ஜனரஞ்சக அரசியல் நோக்கராக ஆயுதத்தை பின்பற்றினார்.இந்தியா-பாகிஸ்தான் உறவு பற்றி கேட்டபோது, நான் முன்னதாக பாகிஸ்தான் சென்றது இல்லை.
மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உறவு குறித்த ஆய்வு செய்தது இல்லை என்றார்.ஆனால் இந்தியா, உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் இருநாடுகள் குறித்து வற்புறுத்தி கேட்டபோது, இரு நாடுகளின் உறவு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றார். இது என் வரம்பிற்கு அப்பாற்பட்டது.இது குறித்து நீங்கள் மத்திய அரசிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்றார்.காங்கிரஸ் ஆதரவு அளித்தது குறித்து கேட்டபோது காங்கிரஸ் எங்களது வலையில் தானாகவே சிக்கி உள்ளது.
எங்களது நோக்கம் ஊழல்களை சுட்டிகாட்டுவது மற்றும் ஊழல் அரசியல்வாதிகளை தோலுரித்து காட்டுவதுதான் என்றார்.அவர்களது குற்றத்தன்மை வணிக மற்றும் பரம்பரை அரசியல் ஆகியவைதான் இலக்கு என்றார்.அதற்கு பாகிஸ்தான் பத்திரிகைகள், உங்கள் மீது தான் அந்த பொறுப்பு விழுந்துள்ளது என ஆம் ஆத்மி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.நாங்கள் சாதாரண மக்கள்.உங்களுக்கு அல்லாவின் ஆசியுடன் எல்லாவித வெற்றிகளும் கிட்டும் என வாழ்த்தியுள்ளனர்.
எதிரியாக இருந்தாலும் நல்லதை, உண்மையை சொல்லும்போது ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய பாமர மக்கள் துயர் தீர ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்; அல்லது மிக அதிக அளவு குறைக்கப்பட வேண்டும்.