நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டீ கடை நடத்தி ஆதரவு திரட்ட திட்டம் பாரதீய ஜனதா கட்சி முடிவுசெய்துள்ளது.
வரும் தேர்தலில் மோடியை ஆதரிக்க கேட்டு, 300 நகரங்களில், ஆயிரம் இடங்களில பல கட்டமாக டீ விற்கும் கடை துவக்கி இதன் மூலம் மக்களிடம் பா.ஜ., அரசுக்கு வர வேண்டிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் செய்யவிருப்பதாக பா.ஜ., எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் கூறுகையில், சாய் பி சார்ச்சா என்ற டீ விற்கும் வியாபாரம் நடத்தப்படும். இதன் மூலம் மோடிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளோம்.
10 முதல் 15 ரவுண்ட்டுகளாக நடத்தப்படும். இதற்கென ஆயிரம் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட பிரசாரத்தை பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரும் பிப்ரவரி 12ம் திகதி துவக்கி வைக்கவுள்ளார்.
மேலும் இந்த பிரசாரம் தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை போன் மற்றும் சமூக வலைதளம் மூலம் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கலாம். இந்த பிரசாரத்தின் மூலம் சுமார் 2 கோடி பேரை சந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் இந்த பிரசாரம் பா.ஜ., வுக்கு பெரும் செல்வாக்கை தரும் எனவும் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு எப்படியாவது seats பிடிக்க வேண்டும் என்பதுதான் முழு முதல் நோக்கம், மற்ற கட்சிகளைப் போலவே. ஏன் ஊழலை ஒரு பொருட்டாக கருத மாட்டேன் என்கிறது உங்கள் கட்சி…? இந்தியாவின் விமோசனம் ஊழல் ஒழிப்பில்தான் உள்ளது. ஆனால் இந்தியாவின் விமோசனம் உங்களுக்கு முக்கியமல்ல; சீட்ஸ், சீட்ஸ், சீட்ஸ்….. அதுதான் அதிமுக்கியம்.
இந்தியாவில் ஊழல் வாழ்க்கையின் ஒரு அங்கம். அர்விந்த் கெஜ்ரிவாலும் இதற்கு விதி விளக்கு இல்லை– நேற்றைய செய்திகளின் படி. அங்கு மேலிருந்து அடிமட்டம் வரை ஊழல் ஊழல் .அங்கு யாரையும் நம்ப முடியாது. முந்தய அதிபரும் ஊழலில் நீந்தியர்வர்தான்
இவன்களுக்கு நாட்டின் மானம் மரியாதை பற்றி அக்கறை கிடையாது.
இந்தியாவைப்பற்றி தெரிய வேண்டுமானால் TIMES NOW தொலைக்காட்சியைப்பார்தால் புரியும். இவ்வளவு மோசமான நாடா என்று புரியும். வெட்கக்கேடு .