கோட்டைக்குள் மோடி அதிரடி பிரவேசம்: கம்யூ., திரிணமுல் கலக்கம்

mudiஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கோலோச்ச ஆரம்பித்தது. தற்போது, திரிணமுல் காங்கிரசையும் அசைத்துப் பார்க்கும் வகையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெற்றுள்ளது. கோல்கத்தாவின் பிரிகேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் பங்கேற்க, ஒருவருக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்படிருந்தது. இந்த பேரணி மூலம் பா.ஜ.,வுக்கு ரூ.25 லட்சம் வசூலானது.

இந்த பேரணிக்காக, கடநத மாதம் இணையதளம் மூலம் பதிவு செய்யும் பணியை பா.ஜ., துவக்கியது. 18 வயது முதல் 40 வயது வரையானவர்கள் இந்த பேரணியில் பங்கேற்கலாம் என்றும் அவரவர் விருப்பப்படி, ஆனால் குறைந்த பட்சம் ரூ. 100 நிதி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. பேரணி நடைபெறுவதற்கு முதல் நாள் வரை சுமார் 22 ஆயிரம் பேர் தங்கள் பெயரைப் பதிவு செய்திருந்தனர்; இதில் 18 ஆயிரம் பேர் குறைந்த பட்ச நிதியாக தலா ரூ.100 கொடுத்துள்ளனர். அதற்கும் அதிகமாக கொடுத்தவர்கள் பலர். இந்த பேரணிக்கு எவ்வளவு நிதி வசூலானது என்று பா.ஜ., அதிகாரப்பூர்வமாக அறிவிக்கா விட்டாலும், 25 லட்சம் ரூபாய் வசூலானதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத், பெங்களூரூ மற்றும் கோவாவிலும் மோடியின் கூட்டத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது; ஆனால் அப்போது குறைந்த பட்ச கட்டணம் ரூ. 5 அல்லது ரூ. 10 ஆகவே இருந்தது.

TAGS: