தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு எதிராக பொதுநல வழக்கு

navy_fisheman_001தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக மதுரை நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்தரணியான ஆனந்த முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்.அவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகின்றன.

இலங்கை சிறைகளில் தற்போது 169 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 980 படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து தமிழகத்தின் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் 34 கடிதங்களை மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளனர்.

எனினும் மத்திய அரசாங்கம் உரிய பதில்களை வழங்கவில்லை என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: