புதுடில்லி: டில்லி சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்த காங்., கட்சியின் மாஜி முதல்வர் ஷீலா தீட்ஷித் குறித்து விசாரிக்க கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக காமன்வெல்த் ஊழல் மற்றும் தெருவிளக்குகள் வாங்கியதில் ஊழல் ஆகியன குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் 1984 ல் நடந்த சீக்கியர் எதிர் கலவரம் குறித்து முழு அளவில் விசாரிக்க சிறப்பு குழு அமைக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து அவர் கைது வரை சந்திக்க வேண்டியது வரும். இப்படியொரு நிலை வந்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து காங்., யோசிக்கும்.
மாஜி முதல்வருக்கு ஊழலில் தொடர்பா ?: காமன்வெல்த் ஊழல் குறித்து சுங்லு குழு விசாரணைக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டு இருந்தார். அப்போதைய டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலாதீட்சித் மற்றும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது இந்த குழு குற்றம் சாட்டி இருந்தது. ரூ..92 கோடிக்கு உயர்ந்த வகை தெருவிளக்குகள் வாங்கியது தொடர்பான முறைகேட்டில் ஷீலா தீட்சித் மீது புகார் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் டெல்லி அரசு இன்று உத்தர விட்டது.
சீக்கிய கலவரம் குறித்து மீண்டும் விசாரணை ! இது தொடர்பாக சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி கூறுகையில்: முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரிக்க கேட்டுள்ளோம். என்றார். அமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில்; எந்த ஒரு தனி நபரையோ குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை; தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதை சிஏஜி உறுதிப்படுத்தி உள்ளது; இதன் அடிப்படையிலேயே ஊழல் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். 1984 ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்தும் மீண்டும் விசாரிக்க சிறப்பு விசாரணை கமிஷன் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விசாரணை ஒரு ஆண்டுக்குள் முடிக்க கேட்டு கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காமன்வெல்த் ஊழல் தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் சில வழக்குகளை முடிக்க சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்று காங்., எதிர் நடவடிக்கையில் கெஜ்ரிவால் அரசு இறங்கும் போது காங்., ஆதரவு நிலை கேள்விக்குறியாகும். அரசு கவிழும் நிலை ஏற்படும்.
சமீபத்தில் சீக்கிய கலவரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த ராகுல் கூறுகையில்; சீக்கிய கலரவத்தில் காங்., நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அந்நேரத்தில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. எனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை. என்று கூறியிருந்தார்.
சர்ச்சை உருவாக்கிய ராகுல் பேச்சு : இவரது பேச்சுக்கு அகாலிதள் மற்றும் சீக்கிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். காங்., ஆபீஸ் மற்றும் ராகுல் வீ்ட்டை முற்றுகையிட்டனர். காங்., நிர்வாகிகள் யார் ? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ராகுல் விளக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
Sarthar G! Congress must be destroyed at cost for liberation of KHALISTAN!