இலங்கை உட்பட்ட அண்டை நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள அனுகுமுறையில் தளர்வு போக்கு உள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்
இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்ற விடயத்தில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கவேண்டும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் இந்தியாவின் தளர்வு போக்கு காரணமாகவே இந்திய மீனவர்கள் இன்னும் இலங்கையின் சிறைகளில் இருப்பதாக மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகம் வேலூரில் நேற்று இடம்பெற்ற அதிக சனத்திரளைக்கொண்ட கூட்டத்தின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளிடம் இருந்து இந்தியா அழுத்தங்களை எதிர்நோக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுகுமுறைகளே காரணம்.
இந்தியாவுக்கு பாகி;ஸ்தான், பங்களாதேஸ், சீனா, இலங்கை என்று நான்கு பக்கங்களிலும் அழுத்தங்கள் உள்ளன.
இதனைக் களைந்து அண்டை நாடுகள் இந்தியாவுடன் நட்பு நாடுகளாக இருக்க வழிசெய்யப்பட வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார்.
வந்துட்டார்யா ஈரோ, கருத்து சொல்லிட்டாராமாம்….