மீனவர் பிரச்சினையால் இந்திய நாடாளுமன்றில் அமளி

indian_parlimentஇலங்கை அரசினால் பாதிப்புக்குள்ளாகும் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றில் எம்பிக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. எம்.பிக்கள் துணைத்தலைவர் இருக்கை அருகே சென்று கோஷங்கள் எழுப்பினர்.  இந்நிலையில், ஆவேசமுற்ற அ.தி.மு.க. எம்.பி.மைத்ரேயன் துணைத்தலைவர் முன் பொருத்தப்பட்டிருந்த மைக்கை உடைக்க முயற்சித்தார்.

இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அவையை துணை தலைவர் குரியன் ஒத்தி வைத்தார்.

இங்கு அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் உரையாற்றுகையில்,

இலங்கை அரசினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கச்சதீவு தொடர்பாகவும், மீனவர்கள் விடுவிப்பது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும். ஆனால் இதற்கு அவையில் அனுமதி கிடைக்கவில்லை.

கடந்த முறை விதியை மீறிய எம்.பி.க்கள் என்று வெளியிட்ட பட்டியலை திரும்ப பெற வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவைத்தலைவர் இருக்கை அருகே சென்ற மைத்ரேயன், அங்கு தனது கையில் இருந்த காகித நகலை கிழித்து, துணை தலைவர் குரியன் மீது வீசினார். மைக்கை பிடுங்கி உடைக்கவும் முயற்சித்தார். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது.

TAGS: