உருக வைத்த ஈழத்தமிழர் படுகொலை காட்சிகள்: திருநங்கைகளின் அசத்தல் நடிப்பு

thirunangai_elamdance_001சேலத்தில் திருநங்கைகள் நடத்திய அழகிப் போட்டி நிகழ்ச்சியில் ஈழத் தமிழர் படுகொலை காட்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 மற்றும் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அழகிப் போட்டிக்கு நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரக்கரை அழிக்கும் காளி அவதாரம் பற்றிய திருநங்கை ஆட்டம் அபாரமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஈழத் தமிழர் படுகொலை குறித்த தத்ரூப காட்சிகளை திருநங்கைகள் நடித்துக் காட்டினர்.

இதில் இந்திய ராணுவம் இறுதியில் சிங்கள ராணுவத்தை அழிப்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த காட்சியை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் கண்கலங்க உருக்கமாக பார்த்தனர்.

பின்னர் திருநங்கைகள் அழகிப்போட்டி நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு நடிகை அம்பிகா பரிசுகள் வழங்கினார்.

TAGS: