போலியோ ஒழிப்பு: இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்- பிரணாப் முகர்ஜி

போலியோ தடுப்பு விசயத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையில் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றே சொல்ல வேண்டும். என்று குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

நேற்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த போலியோ ஒழிப்பு கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்டு பேசும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது நோய் தடுப்பு விசயத்தில் இந்திய அரசு பயன்படுத்தும் உத்திகள் மிகவும் திறன் வாய்ந்தவை என்பது நிரூபனம் ஆகியுள்ளது. இந்தியா மிக அதிகமான பிறப்பு விகிததம் கொண்ட நாடு அதிக அளவிலான மக்கள் தொகை உடைய நாடு போலியோ தடுப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்தப்போகிறோம் என்ற அச்சம் நிபுணர்களிடையே இருந்தது.

ஆனால் இன்று, சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் அனைத்து கட்டுப்பாடுகளை மீறி, இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த மற்றும் மிக பெரிய வளரும் நாடுகளிலும், போலியோ போன்ற நோய்களை முற்றிலுமாக அழித்தல் முடியும் என்பதை நிரூபித்துள்ளது. என்று தெரிவித்தார்.

TAGS: