விஜயகாந்த் முதல்வரானாலே எல்லா பிரச்னையும் சரியாயிடும்! பிரதமர் மன்மோகன்சிங்

vijayakanth_manmohan_001தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டும் தமிழகத்தின் முதல்வரானால் அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது, இந்நிலையில் பிரதமரை சந்திக்க போவதாக கூறி விஜயகாந்த் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையே நேற்று சென்னையில் இருந்து 20 எம்.எல்.ஏக்களுடன் டெல்லி புறப்பட்டு சென்ற விஜயகாந்த், இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் விஜயகாந்த் உடன் தேமுதிகவின் 20 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.

இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, தாதுமணல் கொள்ளை, முல்லை பெரியார், காவேரி உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விஜயகாந்த் மனு ஒன்றை கொடுத்தார்.

பிரதமருடனான இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறுகையில், தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பிரதமருடன் பேசினேன்.

அதேபோல் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை, மின்வெட்டு பிரச்சனை குறித்தும் பிரதமரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்த் தன்னை சந்தித்தது மகிழ்ச்சி என்றும், விஜயகாந்த் மட்டும் தமிழகத்தின் முதல்வரானால் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் பிரதமர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAGS: