புதுடில்லி:செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளிவீரர்களை விண்கலத்துடன் அனுப்பும் அடுத்த கட்ட திட்டத்திற்கு இஸ்ரோ தயாராக உள்ளது. முன்னதாக, செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது சாதனை செய்த இந்தியா,அதன் அடுத்தகட்ட முயற்சியாக விண்கலத்துடன் இந்திய விண்வெளிவீரர்களையும் அனுப்பி ஆய்வு செய்யதிட்டமிட்டுள்ளது. இது மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் சோதனை ஓட்டம் துவங்கும்.இது ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து கிளம்புகிறது.
அடுத்தகட்ட முயற்சி:
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்த இஸ்ரோ, முதன்முதலாக விண்வெளி வீரர்களையும் விண்கலத்துடன் அனுப்பும் முயற்சி மிகுந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு அனுப்ப முயற்சி எடுத்து விண்கலத்துடன் அதற்குள்ளேயே துணை சுற்றுப்பாதை விமானம் ஒன்றையும் இணைத்து அதில் வீரர்கள் பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பு என்கிறார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக செயலாளர் ராதாகிருஷ்ணன்.
ரூ.12,500 கோடி நிதி:
விண்கலத்துடன் இந்திய விண்வெளிவீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து ரூ.12,500 கோடி செலவாகும்.இதற்கு முன்னர் ரஷ்யாவும், அமெரிக்காவும் இதனை சிறப்பாக செய்து முடித்துள்ளது. கடைசியாக சீனா2003ல் விண்கலத்தை பறக்கவிட்டிருந்தது.ரூ.12,500கோடியில் இதுவரை ரூ145 கோடி அனுமதி கிடைத்திருக்கிறது.விண்வெளி வளர்ச்சிக்கு அரசு நிதி ஊக்கப்படுத்தும் நோக்கில் இருந்தால் தான் மிகப்பெரிய தொழில்நுட்பத்தை பெறுவது சாத்தியமாக இருக்கும்.இந்திய விண்வெளிவீரர்களுக்கு காப்ஸ்யூல் உருவாக்கப்படுவது இந்துஸ்தான் ஏரோனாட்டிக் நிறுவனத்தின் மூலம்தான். இது பெங்களூருவில் உள்ளது.