ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரையும், ஆயுள் தண்டனை பெற்றுள்ள 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் இன்று முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு; தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவர்களுடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்ததோடு, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் என்றும்; எனினும் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 432 மற்றும் 433என்-ன்படி, அரசு எடுக்கும் தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
உச்ச நீ மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிவந்தவுடன், இது குறித்து உடனடியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விரிவான விவாதத்திற்குப் பின், இன்று, 19.2.2014, காலை எனது தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுதேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோர் 23 ஆண்டுகளாக சிறைச்சாலையில் இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, ஏற்கெனவே ஆயுள் கைதியாக 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சமயம் பார்த்து ஒரு சந்தர்பம் கிடைத்துவிட்டது ! தேர்தல் நேரம் ! பழுத்த கனி கையில் விழுந்ததை போல !! ஆனால் நீர் இழைத்த தீங்குகளை , புலிகளுக்கு செய்த பாவங்களை கொஞ்சம் திரும்பிப்பார் !!
40தும் அம்மாவுக்கே, அம்மா புகழ் உலகெங்கும் பரவ செய்வோம். பாரத மாதவே (அம்மா).ஹா ஹா ஹா ………
சுப்பரமணிய சுவாமியை உள்ளே போட்டு விசாரிக்கும் முறையில் விசாரிக்க வேண்டும்,ஜெயின் கமிசன் அறிக்கையிலேயே உண்மையை சொல்ல மறுக்கிறார் என்று கூறியுள்ளது !
புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் சரியான முடிவுக்கு நன்றி பாராட்டுகிறோம் . வரும் தேர்தலில் உங்கள் கட்சி 40 இடங்க்களை கண்டிப்பாக வெல்லும் . வெற்றி கனி உங்கள் கைகளில் .நீங்கள்தான் பாரதத்தின் அடுத்த பிரதமர் .வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் மக்கள் திலகம் MGR சேரும் .அந்த நால்வரையும் தயவு செய்து புது வாழ்வு அமைத்து கொடுத்து புகழ்பெறுங்கள் .வாழ்க நலம் .அன்புடன் தமிழன் .மலேசியா.
பரப்பான சு. சாமி என்ன ஆனா, அவா இருக்காளா இல்லையா. இப்ப அவா தமிழ் நாட்டு பக்கம் போனால் சு… சுண்ணாம்பு அடித்து விடுவார்கள்.
எது நல்லது செஞ்சாலும் குறை சொல்ல ஒரு குள்ள நரி கூட்டம் இருக்கு …….உங்களது முடிவுக்கு எங்களது பாராட்டுகள் ….வாழ்க
நடுவண் சட்டம் பல குழப்பம்
ராஜிவை கொலை செய்தவர் அவருடன் மனித வெடி குண்டில் வீர மரணம் கொண்டார் என்பது உலக உண்மை. மரண தண்டனை மீறி கடந்த 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்பது உலக சட்டத்தில் கூட இல்லை.
உலக அரசியலில் எத்தனையோ தலைவர் சாவுகள்.அன்றைய பிரதமர் ராஜீவ் கொலை அது அந்த நாட்டின் பாதுகாப்பு ஏமாளி தனத்தை
காட்டுகிறது. தூக்கில் போடப்பட வேண்டியவர் பாதுகாப்பு அமைச்சர்.கொலையில் பக்க துணை என்ற conspiracy கூற்று நீதி மன்றதில் நிரூபிக்கப்படவில்லை.இப்படி கையால் ஆகாத போலிஸ் துறை பலரை அநீதியாக கால வரையற்ற சிறை வைப்பு என்பது என்ன முட்டாள் சட்டம் என்று கேக்க தோன்றுகிறது.
சட்டம் படித்த காந்தி தன்னை சுட்டவனை ஒன்றும் செயாதீர்கள் என்றதால் அவன் இன்றும் குற்றம் அற்றவனாக செத்துப்போனான் என்று நினைக்கிறன். காந்தி குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாத ராஜீவ் நேருவின் கூட்டம் .
நீதிமன்றம் கொலை குற்றசாட்டில் இருந்து வெளியாக்கி மீண்டும் அதே நீதி மன்றம் தன் முடிவை மறுபடி குழப்பி உள்ளதும் அதற்கு ஒரு ராஜீவ் போரும் தமிழர்கள் மீது இவர்களின் துரோக உணர்வை காட்டுகிறது.
தமிழ் மாநில முதல்வர் செல்வி செயலலிதா அவர்களின் பல ஆண்டு முயற்சிக்கு கிடைத்துள்ள இந்த நல்ல தருணம் அவர் அன்றே இவர்களை விடுதலை செய்து இருக்க வேண்டும். பாதகமில்லை முதல்வரின் கடிதம் கிடைக்க வில்ல என்ற அண்டப்புளுகை யாரும் நம்ப தயாராக இல்லை….. தேர்தல் காலம் இப்பவாவது காங்கரஸுக்கு புத்தி வந்ததே என்று நினைத்தால் வங்காளி கோணல் பண்றான்.
உலகத தமிழர்கள் தமிழ் மாநில முதல்வர் முயற்சிக்கு நன்றி தெரிவிப்போம். தமிழரை வெல்லச செய்வோம். தமிழன் மாநிலப பெருமை காப்போம்.