தனது அதிரடி பேச்சால் கோடம்பாகத்தை அதிரவைத்து வருபவர் தங்கர் பச்சான். தற்போது நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கொடுக்கப்பட்டதை விமர்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் மத்திய அரசு கமலுககு பத்மபூஷண் விருது கொடுத்து கவுரவித்தது. இந்த விருதை இன்னும் சில தினங்களில் தில்லி சென்று வாங்கவிருக்கிறார் கமலஹாசன். இந்த நிலையில் தான் கமலுக்கு இந்த விருதை கொடுத்ததை விமர்சித்துள்ளார்.
கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அவர் பணம் வாங்கிட்டுதான் நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட வலம்வரலாம். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே? என்று தங்கர் பச்சான் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும் என்று கூறியுள்ளார் தங்கர் பச்சான்.
உன்ன மாதரி உள்ள முட்டாள் மடையர் இருக்கிறவரைக்கும் இந்தியா உருபட்டமாடரித்தான் ……எல்லாதுக்கும் குறை சொல்ல ஒரு குள்ள நரிகுட்டம் எப்போ எப்போன்னு இருக்குது …..
கூத்தாடி பசங்கள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு விருதுகள்
கிடைக்கத்தான் செய்யும். எழுத்தாளர் ராஜநாராயணனுக்கு கொடுத்தால் என்ன என்றுதானே என்று தங்கர்பச்சான் கேட்டார்
அதில் என்ன தவறு ? நல்ல தரமான படங்கள் தரும் தங்கர் பச்சன்
எங்கே ? குமரிகளுடன் காமகளியாட்டம் ஆடும் கமல ஆசான் எங்கே ?
விஸ்ணு
போல் ஒரு முட்டால் மடையன் இருக்கும் வரையில் ஒரு நடிகன் இன்னும் நிறைய
பட்டம் வாங்கலாம். குறிப்பாக நமது மலேசியாவில் ஒரு தமிழன் அதுவும் எல்லவற்றுலும் சகலவள வலல்வன் மொழி பாட்டு எழுது என சக்கைபோடு போடவர் இன்று நமுடன் இல்லை. அவருக்கு பட்டம் இங்கு உள்ள அரசியல் வாதிகள் சிபாரிசு செய்ய வில்லை. அவர்தான் வில்லு பாட்டுக்கு சொந்தக்காரர் ரெ. சண்முகம்.
நெத்தியடி ஆசாமி அவர்களே !! நாற்றாக சொன்னிர்கள், இந்தியாவில் எப்படி பட்டங்கள் பெறுவோர் தேர்வு செய்கிறார்கள் என்று “விஷ்ணு ” முதலில் தெரிந்து கொல்லொட்டும் ! தமிழகம் என்றாலே வடகத்தியனுக்கு ஒரு இளக்காரம் தான் . எனேற்றால் அவனைவிட இவன் கெட்டிக்காரன் (தமிழன் ).
ஆசாமி அண்ணாச்சி இன்னைக்குதான் நீங்க கருத்தா கருத்து சொல்லி இருக்கீங்க….. பாராட்டுகள்…. ரெண்டு பேரும் படைப்பாளிதான். ஆனால் வேறுபாடு மலை அளவு. இந்தியா சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது எனவே பாராட்டும் பரிசளிப்பும் அதை சார்ந்தவர்களுக்கு தானே கிடைக்கும்….
உண்மை தமிழ் நாடு ஹீரோ எல்லாம் தங்கள் ஒரு பெரிய தியாகி என்றும் நினைப்பு
இப்படியெல்லாம் சொல்லுவதற்குத தங்கர் பச்சானுக்கு ரொம்பவும் தில் வேண்டும். அது அவரிடம் நிறையவே உண்டு. கமல் கலைஞர்களை மதிப்பவர். நல்லதே நடக்கட்டும்!