அஜித் – விஜய் இருவரும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு”
இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.
கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அபோது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்திய அஜித், விஜய் படங்களில் மது குடிப்பது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால, நம்ம தல ,தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க, நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும்.
அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள். அதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள். அடுத்தவங்களை அழித்துத் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? யோசியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். விழாவில் பட்டியல்சேகர், பி.எல்.தேனப்பன், ஜி.கே,ரம்மி பாலகிருஷ்ணன், எல்வின்பாசர், லியாஸ்ரீ
டைகர் ராஜசேகர், இசையமைப்பாளர் எஸ்.வி.ஜி,தயாரிப்பாளர் கே.சண்முகம், பிரேம்நசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்று உறுதியளித்துவிட்டார். ஆனால் தலைவா படத்தில் அவர் குடித்துவிட்டு நடனமாடுவதுபோன்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அஜித் நடித்து அண்மையில் வெளியான வீரம் படத்தில்கூட அவர் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
முதலில் இந்தியாவில் டாஸ்மார்க் கடைகளை ஒலித்து கட்டுங்கள் . குடிகார சமுதாதயத்தை உருவாக்காதீர் .
இரு நடிகர்கள் குடிக்கும் காட்சியில் நடிக்காவிட்டால் இந்திய சமூகம் திருந்தி விடப்போகிறதா? ஒன்றும் கிடையாது நம்மினத்தைச் சேர்ந்த இளைஞர்களில் பாதிப் பேர் குடித்து குடித்து ஈரல் வெந்து போயிருக்கிறார்கள். குடிக்கு எதிராக நடிகன்கள் மட்டும் அல்ல அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்துவதே கிடையாது.
தற்போதைய தமிழ் திரை படங்களில் எல்லாம் குடிகார காட்சிகள் இல்லாமல் படமே இல்லை. என்னமோ இதெல்ல்லாம் நம்மவர்களின் கலாசாரம் போல் ஆகிவிட்டது. நம் இனம் அழிவுக்கு இந்த குடியே காரணம். முந்திய சிங்கை அதிபர் இதன் காரணமாகவே தம் பதவி இழந்து நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாகி விட்டது இன்னும் இந்த குடி நம்மவர்களை கெடுத்து குட்டிசுவர்களாக்கி எவ்வளவோ குடும்பங்களை அழித்து விட்டது. ஏன் நம்மினம் இவ்வளவு கீழ்த்தரமாகிவிட்டது? சிங்கையில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் சம்பந்த பட்டவர்கள் அதிகமானோர் தமிழ் நாட்டு நம்மவர்களே — நம்முடைய மானம் மரியாதை எல்லாம் காற்றிலே பறக்க விட்டு விட்டனர்.
தமிழ் நாடில் யாராவது குடிப்பதை நிறுத்துவது ஆவது முடியாத காரியம் …கரு-நாய் -நிதி ..தமிழர்களுக்கு இலவச சாராயம் கொடுத்தே 5 முறை ஆண்டு ..ஆசியாவில் பணக்காரர்களில் ஒருவன் ஆகியவன்